ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி - பிரதமர் வழங்கிய விளக்கம்


ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அவர்கள் தெரிவிப்பதை செவிமடுங்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (3.12.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நிர்வாகம் கடுமையான வீழ்ச்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வரலாற்றில் ஒரு ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றம். பாரம்பரியமான தேர்ந்த அரசியல் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர், இந்தச் செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்.

துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்

எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளனர். 

அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.