ஜனாதிபதித் தேர்தல்: வீண் செலவீனங்களை நிறுத்த வேண்டும்! ராஜித சேனாரத்ன

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போது அதனை செயற்படுத்த முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்து செய்வதாயின் ஜனாதிபதி தேர்தலுக்கான வீண் செலவீனங்களை முதலில் நிறுத்த வேண்டும். 

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றுக்கும் பிரதமருக்குமான அதிகாரங்களை அதிகரிப்பதற்கான யோசனை திட்டத்தினை நாம் கொண்டுவந்தோம்.

எனினும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களை பாதுகாக்கும் வகையில் சில திட்டங்களை கொண்டுவந்தார்கள். 

இவ்வாறான காரணிகளினால் ஜனாதிபதி முறைமையை நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் இரத்து செய்யமுடியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.