பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் சுயேட்சை எம்.பி.க்களாக செயற்படுவதாக அறிவித்த எம்.பி.க்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்களுடன் தம்மிக்க பெரேரா தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடிய போதிலும் கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என அரசியல் வதந்திகள் நிலவி வரும் நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.