நாயை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபரின் ஆலோசகர்! அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பீட்டா

சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா வலியுறுத்தியுள்ளது.

பீட்டாவின் அதிகாரி ஒருவரான டப்னா நச்சிவினோமிச் இது தொடர்பில் தெரிவிக்கையில், அதிபரின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டும்.

விலங்குகளை பாலியல்ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களுக்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அநேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அதிபரின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் காணொளி வெளியான சிலமணிநேரத்தில் தனது பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.