நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தயார்: ஜனாதிபதி


புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையை வென்ற மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை இவ்வாரத்திற்குள் நியமிக்கவுள்ளேன்.

அதன் பின்ன நாடாளுமன்றுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் 19 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டு அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.