ஜனாதிபதி 48 நாடுகள் முன்னிலையில் வைத்த கோரிக்கை!

நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.48 நாடுகளுடன் ஜப்பானில் நடைபெற்ற 4வது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் சாதனைகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும் என குறிப்பிட்டார்.கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இலங்கையால் கடந்த வருடங்களை விட 50% அதிகமான புதிய நீர் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.எதிர்கால சந்ததியினருக்கு நிலையான அபிவிருத்திக்காக நீரை முகாமைத்துவப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.