மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மகிந்த

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்ற போதிலும் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி மிகவும் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு புறம்பாக தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை.

45 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.