நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்த நிலையில் குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .