திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்துண்டிப்பு!

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் இன்றும்  நாளையும்  பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .எவ்வாறாயினும் இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது .அதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது .