சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களின் போது நீங்கள் இருக்கும் இடத்தை முகநூல் மூலம் தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொலிஸார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (11.11.2025) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுக்கும் பேருந்து அல்லது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ஓட்டுநரைப் பற்றிய புரிதல்
மேலும், குறித்த வாகனத்தின் ஓட்டுநரைப் பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயணங்களின் போது, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை புகைப்படம் மூலம் முகநூலில் பகிர்ந்துகொள்வது குற்றவாளிகள் அல்லது உங்களின் வீட்டை நோட்டமிடும் ஒருவருக்கு சாதகமானதாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
முகநூல் பயனர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை! | Police Warn Facebook Users
எனவே, நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்பதை யாரும் அறியத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
