வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பொலிஸார் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை - அரச அச்சகம்!

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கா லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான வாயிலில் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வாக்குச் சீட்டு அச்சிடும் போது பாதுகாப்பிற்காக 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாகவும் அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கா லியனகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அங்கு கலந்துரையாடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.நீதிமன்ற உத்தரவிற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இதன்போது முடிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.