இன்றும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால் அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது.அதேநேரம், பீப்பாய்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேவையற்ற இருப்புக்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் இன்றும் பல இடங்களில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.நேற்றையதினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலையை அந்நிறுவனம் அதிகரித்தது.12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாகவும் 5 கிலோ சிலிண்டரின் விலை 1680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.