அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு-கடும் நெருக்கடிக்குள் மக்கள்!

பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.டொலர் பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிகொண்டுள்ள இலங்கையில் இறக்குமதிக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளன.அத்தோடு அத்தியாவசிய பொருட்களுக்கு செலுத்த டொலர் இல்லாதமை காரணமாக ஆயிரக்கணக்கான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.ஏற்கனவே விவசாயத்துறை வீழ்ச்சி, பொருட்களுக்கு தட்டுப்பாடு என்பவற்றினால் கடும் கோபத்தை வெளிப்படுத்திவரும் மக்களிடம், எரிபொருளை அதிகரிக்க போவதில்லை என அரசாங்கம் உறுதியளித்து வந்தது.இருப்பினும் ரஷ்யா – உக்ரேன் நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்தமை காரணமாக வேறுவழியின்றி உள்நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து விமான பயணச் சீட்டு விலை, தங்கம் விலை, உணவு பொருட்கள், கோதுமை மா, மருந்து, முச்சக்கர வண்டி கட்டணம் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமை மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.