ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் உரையை வரவேற்று இவ்வாறு பட்டாசு கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம, மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தலதாவை வழிபட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன் பின்னர் ஜனாதிபதி, மல்வத்து பிரிவின் பெருந்தலைவர், வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரிய தரப்பு மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரர் ஆகியோரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை நாட்டின் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பில் முற்போக்கான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி கண்டி நகர திட்டத்தை ஆளுநர்களிடம் கையளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.