பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உணர்ச்சிகரமாக உரையாற்றிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நெகிழ்ச்சி அடைந்து குரல் தழு தழுத்த நிலையில் கண் கலங்கினார்
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது , பட்டலந்த படுகொலை, சித்திரவதை முகாம் தொடர்பான பட்டலந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்து, முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு உரையாற்றிக்கொண்டிருந்த போது சபையில் அமைதி நிலவியதுடன், அரசுத்தரப்பு உறுப்பினர்கள் இறுகிய முகங்களுடன் காணப்பட்டனர். பிமல் ரத்நாயக்கவின் உரையை கவனமாக கவலை தோய்ந்த முகத்துடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டிருந்தார்.
பிமல் ரத்னாயக்க உரையை நிறைவு செய்த நிலையில், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார்.பின்னர், தழுதழுத்த குரலில் அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு வாய்ப்பு வழங்கினார்
சபாநாயகர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பெயரை கூறிய போது அவரின் குரல் உடைந்த நிலையில் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தன.