நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 அல்லது 16ஆம் திகதிக்குள் கடவுச்சீட்டுக்கான இந்த வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும்.
கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் | New Government S Decision On Passports
அத்துடன், புதிய கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த முடியும் எனவும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசையை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்