சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றை அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவு கோரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சனல் 4 வீடியோ வெளியான தருணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மனுசநாணயக்கார அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவை அமர்விற்கு முன்னதாக வீடியோக்கள் ஆவணங்களை அமைப்புகள் வெளியிடுவது வழமை எனவும் மனுசநாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            