பரா ஒலிம்பிக் தொடர் : பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடம்

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
 
சீனா இதுவரை 53 தங்கம், 40 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 115 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
 
இரண்டாம் இடத்தில் உள்ள பெரிய பிரித்தானியா 30 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 61 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
 
அமெரிக்கா, 20 தங்கம், 22 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 53 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
 
இதுவரையில் ஒரு வெள்ளிப்பதக்கத்தை மாத்திரம் வென்றுள்ள இலங்கை இந்த பட்டியலில் 60ஆவது இடத்திலுள்ளது.

இதேவேளை பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

7 மாத கர்ப்பிணியான அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன் மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை அவர் இந்த பரா ஒலிம்பிக் தொடரில் படைத்துள்ளார்