தன்னை வம்பிழுத்தவரை இந்திய ரசிகர் என நினைத்து பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவூப்(Haris Rauf) அடிக்க முயன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் ஹரிஸ் ரவூப் தன் மனைவியுடன் நகரை சுற்றிப்பார்க்கும் போது ரசிகர் ஒருவர் அவரை விமர்சிக்கும் வகையில் ஏதோ பேசியுள்ளார்.
அப்போது தன்னுடைய பொறுமையை இழந்த ஹரிஸ் ராஃப், “அவர் இந்தியராக தான் இருப்பார்” என்று தன் மனைவியிடம் கூற, பதிலுக்கு அந்த ரசிகர் “இல்லை நான் பாகிஸ்தான் தான்” என்று கேலியாக கூறியுள்ளார்.
🚨 Haris Rauf fight with a fan 🚨
— M (@anngrypakiistan) June 18, 2024
"Ye India se ho ga" - Haris
"Nahi main Pakistan se hoon" - Fanpic.twitter.com/eQClc0fx5H
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த ஹரிஸ் ரவூப் தடுக்கமுயன்ற மனைவியின் கையை தட்டிவிட்டு, அந்த ரசிகரை அடிக்க ஓடினார். பின்னர் அங்கிருந்த அனைவரும் சேர்ந்து ஹரிஸ் ராஃபை தடுத்து நிறுத்தி எந்த விபரீதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதனை பார்த்த ரசிகர்கள், “வீரர்கள் பொதுவெளியில் குடும்பத்துடன் இருக்கும் போது, ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துகொள்ள கூடாது” என்றும், | “பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணக்கமாக இருந்தாலும் ஒரு மூன்றாவது நபர் ட்ரோல் செய்யும் போது உடனே இந்தியர் தான் என நினைப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியவில்லை” என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி,(Mohsin Naqvi )இந்த "பயங்கரமான சம்பவத்தை" கண்டித்துள்ளார், தேசிய வீரர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" மற்றும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.
"சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ஹாரிஸ் ரவூப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் பொறுப்பான நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் கூறினார்.