ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளர் விமான நிலையத்தில் கைது

ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். சுமார் 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் இவரது ஆழ்கடல் வள்ளம் கடற்படையினரால் கைப்பற்றபட்டு,காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

தனது ஆழ்கடல் வள்ளம் கடற்படையினரிடம் சிக்கியதை அறிந்த இவர், மாலதீவுக்கு தப்பிச் செல்லும் நோக்குடன் விமான நிலையத்துக்கு வந்து, விமானமேறும் கடைசி பாதுகாப்பு கருமபீடம் வழியாக செல்ல தயாராகுகையில், கைது செய்யப்பட்டார். நீர்கொழும்பு பலகத்துறையில் வசிக்கும் 38 வயதான வர்த்தகர் ஒருவரே கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.