இலங்கையில் அதிகரிக்கும் வாய் புற்றுநோய்: வெளியான அதிர்ச்சி தகவல்



நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

வாய் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள அரச பல் சிகிச்சை நிறுவனத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது மக்களிடையே பல் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. இனிப்பு பண்டங்கள் உண்பது, குளிர்பானங்கள் குடிப்பதால் சிலருக்கு வாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் இவ்வாறான வாய்தொடர்பான நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்