கொழும்பு - கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (27.5,2024) கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

அத்துமீறி நுழைந்த நபரொருவர் அங்கு இருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது வர்த்தக நிலையத்திலிருந்த 40 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேக நபர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.