இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

இலங்கையை மையமாகக் கொண்டு கிழக்காசியாவில் தனது பெட்ரோலிய வர்த்தகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைகான தூதுவர் கலித் நசீர் அயாமரி, இலங்கை அதிபரின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்கவுடன் அதிபர் அலுவலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கலந்துரையாடலின் போது, இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள பல முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து எரிபொருள் இந்த நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் விற்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் மற்றும் சுற்றுலா மற்றும் விடுதி தொழில் தொடர்பாகவும் தூதுவர், அதிபரின் தலைமை அதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன் இலங்கைக்கான எமிரேட்ஸ் விமானங்களின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் இணக்கம் தெரிவித்துள்ளார்