ஐயோ.. சாமி.. நான் போகமாட்டேன்' - இலங்கை குறித்து கேட்டதும் பதறிப்போன நளினி!


என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன். அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன். அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை.

என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன். அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்து, பல சட்டபோராட்டத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலையான நளினி, நியூஸ் 18க்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார், அதில் அவர் தான் இந்த சிறையில் உள்ள அந்த சூழ்நிலையை முடிந்தவரை ஒதுக்கிவைத்துக்கொண்டு நல்ல முறையில் உபயோகித்ததாக கூறினார். மேலும் அந்த பேட்டியில் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி : நீங்கள் காதல் திருமணம் செய்துகொண்டீர்கள். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அவரை பார்த்தீர்கள். இருவரும் பார்த்தபோது அவர் உங்களிடம் என்ன சொன்னார்.?

நளினியின் பதில் : நான் அவரை பார்த்தபோது, “நீ ஏன் இன்னும் அழுகிறாய்? ஒரு அதிசயம் நடந்திருக்கிரது. நாம் வெளியில் வந்துவிட்டோம். அந்த முகாமை நினைத்து கவலைப்படாதே. இன்னும் 2,3 வாரங்களில் நான் அங்கு வந்துவிடுவேன். நான் இன்னும் பல நாட்கள் ஆகும் என நினைத்தேன். ஆனால் சீக்கிரமாகவே வெளியில் வந்துவிட்டோம். நீ அழாமல் போ. திங்கட்கிழமை என்னை வந்து பாரு என்று சொன்னார்..

கேள்வி : நீங்கள் இனி தமிழ்நாட்டில் தான் இருக்கப்போகிறீர்களா இல்லை லண்டனில் மகளுடன் இருக்கப்போகிறீர்களா?

நளினியின் பதில் : என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன்.அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. அங்கேயே தான் நாங்கள் இருக்கப்போகிறோம். அவர் இலங்கை முகாமிலிருந்து வெளியே வர அனைத்து முயற்சிகளும் நான் எடுப்பேன்.

கேள்வி : அவர் வெளியே வந்தால், நீங்கள் இலங்கைக்கு போகிற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

நளினியின் பதில் : ஐயோ சாமி..!! நான் இலங்கைக்கு எல்லாம் போக மாட்டேன். அவரையும் நான் அங்கே அனுப்ப மாட்டேன். இனி அதை நான் மறந்துவிட வேண்டியது தான். நாங்கள் இனி இலங்கைக்கு போகும் வாய்ப்பே இல்லை என பதிலளித்தார்.