இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் 46.1 வீதமான பெண்களும், 30 வீதமான ஆண்களும் அதிக உடல் எடையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய நீரிழிவு நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் தொற்றா நோய்கள் தொடர்பிலான ஆபத்துக்களை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற் பருமன் அதிகரிப்பு காரணமாக தொற்றா நோய்கள் அதிகளவில் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மத்தியிலும் உடல் எடை அதிகரிப்பு உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் மொத்த சனத்தொகையில் 1.9 பில்லியன் பேர் உடற் பருமண் அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.