சர்வதேச நாணயநிதியத்திடம் சென்ற எந்த நாடும் மீளவில்லை என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்ட உலகில் எந்தவொரு நாடும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என தேசிய மக்கள் படையின் நிறைவேற்று உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது நாட்டை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் நாட்டின் கடனைத் துண்டித்துவிடும் என்று அண்மையில் கூறினாலும், இது வரை அது நடக்கவில்லை என்றும், மூன்று பில்லியன் டொலர்களும் வட்டியில் பத்தில் ஒரு பங்கும் சேர்ந்ததுதான் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாழ முடியாத மக்கள் மீது வரி விதித்து நாட்டின் கைத்தொழில்களை சிக்கலுக்கு உள்ளாக்குவதன் மூலம் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் பாதையில் நாடு பயணித்து வருகின்றது என்றார்.