பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய கட்சிகளின் தலைவர்களை அரச தலைவரின் செயலகத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி குழுவினர் நேற்று கோட்டாபய தலைமையில் அரச தலைவர் மாளிகையில் கூடியுள்ளனர். இதன் போது தவறான கருத்துக்கள் பரப்புவதை தடுக்க வேண்டும். அத்துடன் கட்சியை பிளவுபடுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.