பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            