முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் சட்டமூலம்த்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் பதிவாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டமூலம் 150 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.