முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்
அத்துடன் யோஷித ராஜபக்ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து நூற்று எண்பத்தி இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் யோஷித ராஜபக்ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.