இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண விபரம் வெளியானது


எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இபருபதுக்கு20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பரில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள நிலையிலேயே அந்த அணி ஒரு மாதத்தின் பின் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டிசம்பர் கடைசியில் நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02 ஆம் திகதிகளில் மூன்று இபருபதுக்கு20 போட்டிகளில் ஆடவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஜனவரி 05, 08 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


இலங்கை அணி கடைசியாக கடந்த ஆண்டு முழுமயான தொடர் ஒன்றாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கோண்டு ஆடிய மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 0–2 என்ற கணக்கிலும் மூன்று போட்டிகளைக் கொண்ட இபருபதுக்கு20 தொடரை 1–2 என்ற கணக்கிலும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

--