வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமனம்

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இலங்கையின் 16 ஆவது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.