இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோர் தொடர்பில் எடுக்கப்படும் புதிய நடவடிக்கை


வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக் கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வேலைவாய்ப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

எனவே ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 2023 ஜனவரி மாதத்தில் 24236 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

உயிரியளவியல் (Biometrics) என்பது மனிதர்களின் உடல் அல்லது நடத்தை சார்ந்த உள்ளார்ந்த தனிப்பட்ட கூறுபாட்டைத் தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்ந்த அறிவியல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.