இலங்கையில் புதிய கிளர்ச்சி எச்சரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவில்லையென சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சங்கங்கள், குடிசார் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மீண்டும் போராட்ட அலை எழும் பட்சத்தில் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்திக்கும் எனவும், குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மிகவும் கடினமாக உழைத்துள்ள நிலையில், எதிர்மறையான செயற்பாடுகளை ஏற்க முடியாது எனவும் இலங்கை விடுதி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தங்கள் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலகநாடுகளின் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் இலங்கை வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் சமூகத்தினர் தங்கள் நாடகங்களை நிறுத்திவிட்டு நாட்டின் மக்களின் சிறந்த நலன்கள் குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் இது என இலங்கை விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், குடிசார் வில் அமைப்புகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை அறிவித்துள்ள நிலையில், இந்த கருத்து வந்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றால் அது சிறந்த விடயம் ஆனால் வன்முறைகள் இடம்பெற்றால் மக்களினதும் வர்த்தகங்களினதும் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமது தொழில்துறை நெருக்கடியிலிருந்து மீண்டும் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி தள்ளப்படுவதாகவும், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் சிந்திக்கவேண்டும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.   மை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இருந்த கலையகம் ஒன்றினுள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ,

அங்கிருந்த 06 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, அங்கிருந்த வாகனம் மற்றும் கலையகத்திற்கும் தீ வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் ,

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடையவர் எனவும் , கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.