அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதிகளில் நேற்றையதினம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 6 குழுக்கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.
அத்துடன், நேற்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை இலக்கு வைத்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.