சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பூமி! எப்போது நிகழ்கிறது தெரியுமா

பூமிக்கு அருகில் சூரியனைக் காணக்கூடிய அற்புதமான காட்சியை வானில் கண்டு கழிக்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டில் (2024) சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது.

இந்த அற்புதமான நிகழ்வு குறித்து அறிவியலாளர்கள் மேலும் தெரிவிப்பதாவது,

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும்.

இந்த நிகழ்வு பெரிஹேலியன் தினம் என அழைக்கப்படுகிறது.

பெரிஹேலியன் நாள் என்பது பூமியின் வருடாந்த சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் தருணத்தைக் குறிக்கிறது.

இந்தத் தருணமானது இந்த ஆண்டில் (2024) தொடக்கத்தில் இன்றைய தினம் (03) இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வின்போது மற்ற நாட்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் - பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக காணப்படும்.

பூமி சூரியனை முழுவதும் சுற்றிமுடிக்க ஓராண்டு காலம் ஆகின்ற போதும் ஆண்டுதோறும் இந்த பெரிஹேலியன் நாள் வரும்.

ஆனால், ஆண்டுதோறும் ஒரே நாளில் பெரிஹேலியன் நாள் வராது, அதாவது ஆண்டுதோறும் இதே நாளில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வராது.

மாறாக ஓரிரு வார வித்தியாசங்களில் பெரிஹேலியன் நாள் நிகழக்கூடும் என அறியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்ற ஆண்டு (2023) இதே பெரிஹேலியன் நாள் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி தோன்றியமை குறிப்பிடத்தக்கது.