இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதேநேரம் பல் கலாசாரம் கொண்ட நாடு என்பதனால் ஒவ்வொரு கலாசாரத்தின் கலைகளும், சிறப்பியல்புகளையும் நடனம், பாடல், நாடகம் போன்றனவும் பெற்றதோடு பாதுகாப்பு படைபிரிவுகளின் அணி வகுப்புகளும் இடம்பெற்றிருந்தன
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க,
இதை நாட்டை அதிகமாக நேசிக்கும் மக்களின் உயிர் தியாகம், வியர்வை, இரத்தம் கண்ணீரால் இந்த நாட்டை எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது போன்று எதிர்காலத்தில் அந்த கௌரவப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்போம்.
ஆனால் இன்று, 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி 77 ஆண்டுகளுக்குப் பிறகு காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று தேசிய சுதந்திரத்தை கொண்டாடும் உங்களுக்கு நான் ஒன்றை உறுதியளிக்க வேண்டும்.
நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கப் போகும் நாடு வரலாற்றால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாடாக அன்றி, நீங்கள் உலக பிரஜையாக வாழ விரும்பும், பிரஜை என்ற உங்கள் கௌரவத்தை மதிப்பளிக்கும், மேம்பட்ட கலாசாரத்துடன் கூடிய ஒரு நாடாக அமையும்.
மேலும், மனித நாகரிகம் இதுவரை அடைந்துள்ள அறிவியல், தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் சாதனைகள், இந்த இலங்கை நாட்டுப் பிரஜையாக அனுபவிப்பதற்கான உங்களது உரிமையை உறுதிப்படுத்தும் நாடாக அமையும் என்றார்.
இதேநேரம் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்ததோடு சிறப்பு நிழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.