நாசாவின் வேற்று கிரகவாசிகள் தொடர்பான சிறப்புத் தகவல்

“வேற்று கிரகவாசிகள் உண்மையானவர்கள் என்றோ, வேற்று கிரகவாசிகள் போலியானவர்கள் என்றோ கூற முடியாது” என்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்(நாசா) பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் உடல்கள் குறித்து உலகளவில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நாசா இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா பல தசாப்தங்களாக பறக்கும் தட்டுகள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறது, இதற்கு அமெரிக்க விமானப் படையும் ஆதரவளித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாசா பறக்கும் தட்டுகளை “அடையாளம் தெரியாத வான் பொருள்கள்” என்று அழைக்கிறது, அத்தோடு நாசா விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகளின் விடயங்களை விளக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த நாசாவின் தகவலில், “இதுவரை அடையாளம் காணப்படாத வான் பொருட்கள் பிரபஞ்சத்தின் தொலைதூரத்தில் உள்ள வேற்று கிரக உயிரினங்களின் விண்கலங்கள் என்று சொல்வதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விஷயங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் தங்களது 36 பக்க அறிக்கையின் முடிவில் வேற்று கிரக உயிர்கள் உள்ளதா இல்லையா என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர்.