அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோப்புக்களை புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
அதற்கமைய கடந்த அரசாங்கங்களின் போது உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் குழுவின் முறைகேடுகள் குறித்த பல விசாரணைகள் தற்போது அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசுவாசமாக செயற்பட்ட செயலாளர்கள், மற்றும் அமைச்சின் செயலாளர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த ஆதாரங்களுடன் சட்ட ரீதியான முறையில் அவர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் பல்வேறு நபர்களை கைது செய்வதற்கான இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            