வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை..! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை


 

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்,

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து  இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிஹிம்பிய ரத்மல பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று  மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் எனவும்,

உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட  முரண்பாட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
--
பிரபல பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத்தை பாதுகாப்புப் படை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் விமர்சித்திருந்தார்.