இன்று அதிகாலை இடம்பெற்ற கொலை : பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது


மனைவி வெளிநாட்டில் உள்ள நிலையில் வீட்டில் தனிமையிலிருந்த குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர அதிபர பகுதியில் இன்று (16) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெனிக்கும்புர, அதிபர பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டவராவார்.

வீட்டின் பாதுகாப்பிற்காக கடமையாற்றிய தனியார் பாதுகாப்பு சேவையொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலைச்சந்தேகநபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.