ரணிலுக்கு நேசக்கரம் நீட்டியோரின் பதவிகளை பறிக்கிறது மொட்டு!

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்ட தலைவரான பிரசன்ன ரணதுங்க, காலி மாவட்ட தலைவரான ரமேஷ் பத்திரண, கண்டி மாவட்ட தலைவரான மஹிந்தானந்த அளுத்கமகே, அநுராதபுர மாவட்ட தலைவர் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டவர்கள் நீக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கையை மாவட்ட மட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.