விபரீதத்தில் முடிந்த மோட்டார் சைக்கிள் சாகசம் - வைரல் வீடியோ

சமீபகாலமாக இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது அதிகரித்துள்ளது.

 சிலர் ஆபத்தான மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

 அண்மையில் ஒரு ஜோடி செய்த மோட்டார் சைக்கிள் சாகசம் வைரலாகி வருகிறது.

 இது தொடர்பான வீடியோவில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் தம்பதியினர் வேகமாகச் செல்லும் போது முன்பக்க டயரை தூக்கி சாதனை செய்தனர்.

 இதற்கிடையில், இருவரும் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.

 இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், அந்த ஜோடியை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.