சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றது.

தரமற்ற மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் இறக்குமதி உட்பட சுகாதார துறையில் எழுந்துள்ள முக்கியமான சில பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டே இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

நாட்டில் கடந்த சில நாட்களாக பதிவான சில மரணங்கள் தொடர்பில் சர்ச்சை நிலை எழுந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சுகாதார துறைக்கு பெரும் அச்சுறுத்தல் என எதிரணிகளும், சுகாதார தொழிற்சங்கங்களும் சுட்டிக்காட்டிவருகின்றன.

அத்துடன், சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும் என விமல் வீரவன்ச உள்ளிட்ட சுயாதீன அணியினர் வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி ஆராய்ந்துவருகின்றது.