கொழும்பில் காலையில் நடந்த பதற்றம் - துரத்தி துரத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நபர்


பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20.05.2023) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பபட்டுள்ளார்.

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.