ஒற்றைத் தலைவலியால் 50 இலட்சம் இலங்கையர்கள் பாதிப்பு!

சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

24 நாடுகளின் ஒருமித்த கருத்துடன் ஆசிய பிராந்திய சிகையலங்கார சங்கத்தின் ஐந்தாவது தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.உலகில் உள்ள சுமார் 5 பில்லியன் மக்களை பலவீனப்படுத்தும் நரம்பியல் நோய்களில் ஒற்றைத் தலைவலியும் ஒன்றாகும் என தெரிவித்துள்ள அவர், இது மனித இயலாமைகளில் 20 சதவிகிதம் எனவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, இலங்கையின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் குழுவுடன் இணைந்து, பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த நோயின் இருப்பை துல்லியமாக கண்டறியும் விசேட மென்பொருள் ஒன்றினையும் உருவாக்கியுள்ளார்.