சீன மொழி பதாதைகளுடன் வடக்கில் பாரிய போராட்டம்!!

வவுனியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீன மொழியில் எழுதப்பட்ட பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, நேற்று நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டம் வவுனியாவிலும் இடம்பெற்றதுடன் ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் அந்த போராட்டம் மற்றும் பேரணிகளை முன்னெடுத்திருந்தது.