1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய போராட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தோட்ட துறைமார் சங்கம் கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெருந்தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த பகுதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.