கொழும்பில் பாரிய போராட்டம்! தொடரும் பதற்ற நிலை

 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரின் போராட்டம் தற்பொழுது கொழும்பில் முன்னெடுக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக, தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையம் அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

குறித்த பகுதியில் காவல்துறை, இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி இந்தப்போராட்டத்தை  மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஏற்பாடு ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வெலிக்கடை காவல்துறையினர் கோரியிருந்தனர்.

இதனை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, சிறிஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டமம் இடம்பெற்று வருகிறது.