டிசம்பர் முதலாம் திகதி முதல் கொழும்பில் பாரிய மலிவு விற்பனை : மார்ல்போ நிறுவனம் அறிவிப்பு

1989 ஆம் ஆண்டு முதல்; 'MARLBO' ட்ரேடிங் நிறுவனம் மின்சார மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் எட்டாவது வெற்றிகரமான 'வருட இறுதி மலிவு விற்பனை” டிசம்பர் முதலாம் ஆம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதிவரை கொழும்பு கொள்ளுப்பிட்டி, அப்துல் காதர் மாவத்தையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற உள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் வீதாகம மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை  இந்த மலிவு விற்பனை இடம்பெற உள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய போதிலும் “மார்ல்போ” (MARLBO) நிறுவனம், அதன் வருட இறுதி மலிவு விற்பனையை எந்த விதமான இடையூறுகளுமின்றி, ஒழுங்கு செய்துள்ளது.


அதன் அனைத்துப் பயன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே 'MARLBO” நிறுவனத்தின் நோக்கமாகும் என பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் வீதாகம குறிப்பிட்டார்.

தெரிவு செய்யப்பட்ட ஒரு சில உபகரணங்கள் 75 வீதம் வரையான விலைக்கழிவுகளுடன் விற்பனை செய்யப்படும்.

குறிப்பாக நிறுவன உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் “சுவிட்ச்”கள் என்பனவற்றை இந்த 3 நாள் மலிவு விற்பனையில் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு உபகரணங்களைப் புதப்பித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இதன் சிறப்பம்சமாக நாடளாவிய ரீதியில் உள்;ளவர்கள் MARLBOவின் மின்சார பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ய MARLBO நிறுவனம் buymarlbo.com  என்ற இணையத்தளத்தையும் அறிமுகம் செய்கின்றது.

இந்த இணையத்தளம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் நபர்கள் வெநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கான அதிர்ஷ்டத்தை சீட்டெழுப்பின் மூலம் பெற்றுக்கொள்வார்கள்.

மேலும், டொலரின் பெறுமதி உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள போதிலும் MARLBO வாடிக்கையாளர்களுக்கு அதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை எனவும் அதற்கான காரணம் விலையேற்றத்தின் ஒரு பகுதியை MARLBO நிறுவனம் ஏற்றுக்கொள்கின்றது என்றும் MARLBO டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் எம்.மணிமுத்து தெரிவித்துள்ளார்.